Sunday, August 3, 2008

நான் படித்த தமிழ் புத்தகங்கள்

கனாக் கண்டேன் தோழி , முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாசாரியார், விகடன் பிரசுரம் விலை ரூ.65

முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாசாரியார் அவர்கள் பல புதகங்கள் எழுதியுள்ளார்கள்
நான் படித்த இந்த புத்தகம், திருமணம் பற்றி சாஸ்திரங்களில் தெரிவித்த பல கருத்துகளை ‌எடுத்துக் காட்டியுள்ளார்.

அதில் சில

ஆண்ணும் பெண்ணும் சமமா என்னும் கேள்வி தற்காலத்தில் எழுந்து வருகிறது. கணவன் பெரியவனா, மனைவி பெரியவளா? அல்லது சமமா? என்ற பிரச்சனை தீர்க்கமாக விசாரிக்க வேண்டிய தர்ம காரியமல்ல. சபையேறும் தர்மமும் அல்ல. இது அந்தரங்கமான விஷயம், ‌‌"ஆணும் பெண்ணும்" என்று எழுதி முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் கூட்டி‌ப் படித்தால் "ஆம்" என்றாகுமல்லா? ஆக ஆணும் பெண்ணும் சமமா? என்ற கேள்விக்குப் பதிலென்ன கிடைக்கும்? ஆம் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமே, இதிலென்ன சந்தேகம்-என்பதுதான் தேறி நிற்கும். இதுவே நம் மதம் கூறும் உண்மைப் பொருள். தீர ஆராய்ந்தால் பெண்ணுக்கே ஒருபடி ஏற்றம். இதை யாரும் ‌மறுக்கவும்கூடாது‌, மறுக்கவும் மனம் எழாது.
லட்சுமியோடு சதாசர்வகாலமும் சேரேந்தே இருக்கும் எம்பெருமானுக்குக் கல்யாணம் என்பது உண்டா? என்னும் சந்தேகம் நமக்கு எழலாம். நாம் ஏன் மறுபடியும் மறுபடியும் பகவானுக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும்? இதில் தான் பெரிய தர்ம சூட்சுமம் அடங்கியிருக்கிறது.


திவ்விய தம்பதிகளைப் பிரித்தவர்கள் அன‌ர்த்தப்பட்டுப் போனாராகள் சேர்த்து வைத்தவர்கள் வாழ்ந்தாராகள்.

படித்து பார்ருங்கள் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்
‌உங்கள் கருத்துற்காக காத்திருக்கிறேன்.