Sunday, September 14, 2008

சிறுகதை "திவசம்"

தினமணி 2007ன் இணைப்பு கதிரில் பரிசுப்பெற்ற கதை "திவசம்"

இது ஒரு முற்போக்கு கதை, தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்பவும், முடநம்பிக்கைக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது. நானும் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்கிறேன் குடும்ப சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தின் காரணமாக, ஆனால் மனதில் இது பற்றி பல எண்ணங்கள், கேள்விகள், சில சமயம் குழப்பங்கள், எது சரியென்று. இதுவரை முடிவு செய்ய முடியவில்லை.

என்னுடைய குடும்பத்திலும் இக்கதையில் வருவது போல் ஒரு சம்பவம் நடந்தது. அக்குடும்பத்தில் எல்லோரும் நலமாகதான் இருக்கிறார்கள், வருடந்தோறும் திவசம் சரியாக முறையாக தான் நடக்கிறது. இது சரியா?, அல்லது இக்கதையில் விஷ்ணு சொல்லுவது சரியா?

அதை விடுங்கள்

கதைக்கு வருவோம்.

சுருக்கம்

பாட்டிக்குத் திவசம் லீவ் போட்டு ஊருக்கு வருமாறு அம்மா, கார்த்தியை அழைத்தார்கள்.

பாட்டிக்கு கார்த்தியை மிகவும் பிடிக்கும், அவனை ஒரு நாளைக்கு நூறு முறையாவது கன்னங்களை உருவிவிட்டு திருஷ்டி கழிப்பாள்.

அது ஓர் ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணி தாண்டியும் சமையல் ஆகவில்லை. பாட்டிக்கு பசி பொறுக்க முடியாமல் இரண்டு முறை தண்ணீர் குடித்துவிட்டால். வெளியே கட்டிருந்து ஜானியும் பசியில் குரைக்கத் தொடங்கியது.

"அந்த நாய்க்கு எதையாவது போடேன்" என்று கையில் ரிமோட்டைக் சுழற்றியபடி அப்பா கத்தினார். அதற்கு அம்மா "வர்றேன் ... எல்லா நாய்க்கும் போடத்தானே வந்திருக்கேன்" என்று அழுத்தமாகவும், ஆங்காரமுமாய் வார்த்தைகள் வெளிப்பட்டது.

...... மறுநாள் காலை பாட்டி வீட்டில் இல்லை. "ஜாதகப்படி பாட்டி ஆயுள் முடிஞ்சுட்டு, அவங்க காணாமப் போன நாள்லேயே திவசம் பண்ணுங்களேன் என்றார் சாம்பு சாஸ்திரி.

முடிவு

அன்றைய நாளை, கார்த்தி சிவானந்த ஆஸ்ரமம் போய் வருகிறானாம்.

"எடுத்துப் போடக்கூட ஆள் தேடமா, வேணாம்னு வெறுத்துட்டுப் போன பாட்டி, இவங்க படைக்கிற புடவைக்கும் பாயாசத்துக்கும் வந்து நிப்பாங்கன்னு நானும் நம்பலை" கார்த்தியின் பெரியப்பா மகன் விஷ்ணு தெரிவித்தது கார்த்திக்கு பெரிய ஆறுதலாய் இருந்தன.


கதை ஆசிரியர் தீபா பிரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Sunday, September 7, 2008

மேற்கின் அழிவிலிருந்து ... பாரதத்தின் மறுபிறப்பு- ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீஅரவிந்தரின் எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்நூலை தமிழாக்கம் திருமதி நளினி மதியழகன் அவர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து 

உலகின் மீது ஆன்மீக ஆதிக்கத்தைப் பரப்ப, இந்தியாவைத் தவிர வேறு யாருக்குச் சர்ச்சையற்ற உரிமை இருக்கிறது?
இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டும்.  ஐரோப்பிய நாகரிகத்தை இந்தியாவுடன் இணைப்பதால் ஐரோப்பாவிற்கும் இலாபமில்லை: ஏனெனில் ஐரோப்பாவின் பிணிகளுக்கு மருத்துவனாக விளக்கக்கூடிய இந்தியாவும் பணிகளின் பிடியில் சிக்குண்டால் நோய் குணமாகாது.

இந்தியன் ஒருவனே அனைத்தையும் நம்புவான், அனைத்தையும் துணிவுடன் ஏற்பான்,  அனைத்தையும் தியாகம் செய்வான்.  ஆதலின் முதலில் இந்தியராகுங்கள்.
கடவுள் மீது நம்பிக்கை, கடவுள் ஒரு புத்தகம் (இத்தனை யுகங்களில்) அதுவும் ஒரேயொரு புத்தகம் எழுதினார் என்பதில் நம்பி¬க்கை, ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்லுதல், இவையே ஐரோப்பாவின் குறைந்தபட்ச மதம். 

"நீங்கள் எதைக் கண்டு பிடித்துள்ளீர்" என்ற கேள்வியில் ஒரு இந்தியன் திருப்தியுற முடியாது.  அதில் கேள்விக் கேட்டுதான்  அவனுக்குப் பழக்கம்.  
இந்தியனின் பதில் இதுவாகாத்தான் இருக்கும் - உனக்கென்ன தெரியுமென்பதில் எனக்கு அக்கறை இல்லை.  நீ யார் என்பதில் தான் எனது அக்கறை.  

வெறும் சம்பிரதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்கள் ஹிந்து சமுதாயத்தில் உண்டு.  மிக பழங்காலத்தில் அவை இருந்தன என்பதற்கு நிரூபணம் இல்லை.  
நாகரிக சமுதாயத்தில் மனு நீதியை முழுமையாக எடுத்துக் கொள்வதென்பது 
கங்கையை ஹிமாலயத்திற்குத் திரும்பி ஓடுமாறு சொல்வதாகும்.

தொடரும்...


புத்தகத்தின் பெயர் : தட்டுங்கள் திறக்கப்படும்

புத்தகத்தின் பெயர் : தட்டுங்கள் திறக்கப்படும் 
ஆசிரியர் : டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
வானதி பதிப்பகம் (8வது பதிப்பு)

மேற்காணும் புத்தகத்தின் முன்னுரையில் 
"வேத நூல்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

உனது பெற்றோரும், ஆசிரியரும் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

பாரம்பரியமாக இப்படித்தான் செய்து வந்திருக்கிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

உன் அறிவை உபயோகித்து எதையும் பரிசீலி.  அதற்குப் பின்னும் அது ஏற்புடைத்தானால் மட்டுமே ஏற்றுக்கொள்". புத்தர் பிரான் கூறிய வாசகத்தை இங்கு நினைவில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இப்புத்தகம் முழுவதும் வாசகர்களின் கேள்விக்கு-பதில் அளிப்பது என்ற முறையில் அமைந்துள்ளது.


ஒரு கேள்விக்கு இப்படி பதிலளிக்கிறார்.

"வாழ்க்கையே; அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டம்தான்; அறிவை முன் வைத்து, உணர்ச்சியைப் பின் வைத்து வாழும்போதுதான், வாழ்வு நல்ல நெறிகளுடன் போகிறது.  உணர்ச்சியை முன் வைத்து காரியங்களைச் செய்யம்போது வாழ்வில் சிக்கல்களை உருவாக்குகிறோம்."


கடவுளைப் போல மனிதனும் ஒரு படைப்பாளியாக விரும்புகிறான்

வீட்டில் சமையல் செய்வதற்கு, தூங்குவதற்கு, குறிப்பதற்கு என்ற தனித்தனி இடங்கள் இருக்கின்றன.  னுல்லாவற்றிற்கும் என்று பொது அறை கூட இருக்கலாம் அல்லவா சில கட்டிடங்களை பொது உபயோகத்திற்கென்று சில அறைகளை விட்டு வைப்பதும் உண்டு.  அதுபோல ஒரு பொது உபயோக செல் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  அமெரிக்காவில் ராக்வில் என்ற இடத்திலுள்ள ஆய்வுக் கூடத்தில் ஐ£ன் கிளாஸ் என்ற அறிஞர் இவ்வித ஆய்வில் இறங்கியுள்ளார்

கம்யூட்டரில் ஒரு ஆப்பரேட்டிங் கிஸ்ட்டத்தை எடுத்துவிட்டு இன்னொரு ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தைப் பொறுத்தி செயல்படுத்துவதற்கு ஒப்பாகும்.  Ê£ராயம் தயாரிக்கும் செல், இரத்தம் தயாரிக்கும் செல் என்று பலவித பொது உபயோகச் செல்களை உருவாக்குவது இவர்களது நோக்கம்.  கடவுளைப்போல மனிதனும் ஒரு படைப்பாளியாக விரும்புகிறான்.