Saturday, June 27, 2009

நான் படித்த புத்தகம் - வலிமைக்கு மார்க்கம்

ஜேம்ஸ் ஆலனின் வலிமைக்கு மார்க்கம்,
தமிழில் வ.உ.சிதம்பரம் பிள்ளை

" ...... உங்கள் வறுமை பளு நாளுக்கு நாள் அதிகமாகிற இருள் உங்களை மூடுகின்றது. நீங்கள் உங்கள் நிலைமையைக் குறை கூறுகின்றீர்கள் உங்கள் வறுமையை நிந்திக்கின்றீர்கள், உங்கள் பிறப்பையோ, பெற்றோரையே, எஜமானையோ மற்றவக்ளுக்குச் செல்வத்தையும் சுகத்தையும் கொடுத்த அதியாயமான தெய்வத்தையோ பழிக்கின்றீர்கள். நீங்கள் பழிப்பதையும் கூப்பாடு போடுவதையும் நிறுத்துங்கள், நீங்கள் பழிக்கின்ற எதுவும் உங்கள் வறுமைக்குக் காரணம் அன்று.

காரணம் உங்கள் அகத்துள் இருக்கிறது, அதன் பரிகாரமும் அங்கேயே இருக்கின்றது. நீங்கள் குறை கூறுபவர்களாக இருத்தலே நீங்கள் உங்கள் தற்கால நிலைமையை அடைவதற்குத் தக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது எல்லா முயற்சிகளுக்கும் அபிவிருத்திகளுக்கும ஆதாரமான நம்பிக்கை உடங்களிடத்தில் இல்லையென்பதைக் காட்டுகின்றது. நியாயமான பிரபஞ்சத்தில் குறை கூறுபவனுக்கு இடமேயில்லை. கவலை ஆன்மாவைக் கொலை செய்யத்தக்கது.

உங்கள் அகநிலைமையை மாற்றுங்கள், உங்கள் புறநிலைமை மாறுதல் அடையும்.