Friday, April 30, 2010

மனித உறவுகள் -2

புத்தகத்திலிருந்து.............

சுமுகமாகப் பழகும் மனிதத் தன்மைகளை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்
1) பிறரது அறிமுகம்-நப்பு‌‌‌-உறவு ஒருவரை‌யொருவர் நம்புதல்.  இந்தப் பரஸ்பர நம்பிக்கை நம் உறவுக்கு வலிமை தருகிறது.
2) நமது பேச்சு மூலமும், சம்பாஷ‌ணை மூலமும் கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் நம் உறவு பலப்படுகிறது.  நம்மால் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாகவும் குழப்பமில்லாமலும் நம் எண்ணங்களைத் தெரிவிக்க முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உறவின் தன்மை அமைகிறது.

3) அடுத்த கட்டமாக, பிரச்னைகள் என்று வரும் போது, நமது பர‌ஸ்பர ஆதரவும் துணையும் உறவுகளின் பிணைப்பை உறுதியாக்குகிறது.  உறவுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் கைகொடுக்க வேண்டும்.

4) பிரச்னைகள் இல்லாத உறவுகளில்லை.  எவ்வளவு நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தாலும் சமயத்தில் மனஸ்தாபம் தோன்றுவது இயல்பு.  அவற்றை உணர்ந்து பிரச்னைகளுக்கு முடிவு காண நாம் முயல வேண்டும்.  பரஸ்பர நம்பிக்கைக்கும் உறவுக்கும் பாதகமேற்படாத வண்ணம் நம் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முயல வேண்டும்.


கௌரவம் என்பது பிறர் கொடுத்து நாம் பெறுவதல்ல.  நம்மைப் பற்றி நாமே கொண்டிருக்கும் மரியாதைதான் நம் கௌரவம்.  பிறர் அதை இடறுகிறார்கள் என்பதால் நாம் தாழ்ந்துவிட மாட்டோம்.  அதற்காக அவர் மீது அனுதாபப்பட்டுவிட்டு நம் காரியத்தைக் கவனிப்பது நல்லது.



குடும்பத்திலும் சரி, தொழிலிலும் சரி; ஒரு முன் உடன்பாடு -மனிதாபிமான நோக்கு நமது நட்பை வளர்க்கும்.  "இதோ பார் நான் ஒன்றும் எல்லாம் உணர்ந்த ஞானியல்ல.  தெரிந்தோ, தெரியாமலோ உன் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடும்.   அது வேண்டுமென்று கெட்ட நோக்கத்துடுன் செய்ப்பட்டதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள் "என்று  மனைவியிடம் சொல்லும் போது வாழ்க்கை எளிதாக அமைகிறது.

Thursday, April 29, 2010

மனித உறவுகள் டாக்டர் எம். எஸ் . உதயமூர்த்தி

புத்தகத்திலிருந்து சில  வரிகள்


மனித உறவுகள் மிக நுட்பமானவை.  சிறு முக மலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.  வார்த்தைகளை மூடி மறைக்கலாம்.  ஆனால் ஒம் உணர்வுகளை மூடி மறைக்க முடியாது.


‌"என்னைப் பாராட்டும் ஒருவனை, உலகின் இரண்டாவது பெரிய மனிதனாக நான் நினைக்கிறேன்!"  பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன்வருகிறது.

ஒரு ஆசை நம்முள் எழுந்ததானால், அதை அடையும் திறமை நம்முள் இருப்பதால்தான் அது நம்முள் எழுந்தது என்கிறார் ஏர்ல் நைட்டிங்கேல் என்ற பிரபல எழுத்தாளர்


நம் அனுபவத்தில் சிற்சில நாட்களில் சிற்சில விஷயங்கள் எல்லாம் நேர்மாறாக நடப்பதைக் காண முடியும், அந்த நேரங்களில் நல்ல பிரார்த்தனையிலோ அல்லது தோட்டம் போடுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், சினிமாவுக்குப் போவது என்பன போன்ற நம் லட்சியத்துக்கு உறவில்லாத வேறு காரியங்களில் ஈடுபடுவது நல்லது. 

பிறர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டாலே அரைவாசிக் குறைகள் மறைந்துவிடும்.  என்பார்கள் மன சிகிச்சை நிபுணர்கள்.  குடும்பத் தகராறுகளிலிருந்து, முதலாளி - தொழிலாளி பிரச்னையிலிருந்து நாட்டிப் பிரச்னைகள் வரை இந்த உண்மை பொருந்தும்.
(தொடரும்)


Saturday, April 3, 2010

அதிகாரத்தை அடைய 48 விதிகள்

இந்த புத்தகத்தில்  எனக்கு படிச்சதில் பிடிச்சவை உங்களுக்காக,

1) நேர்மை நட்பினை வலிமைப்படுத்துவது அரிது.  எனவே ஒரு நண்பார் எவ்வாறு உண்மையாக உணர்கிறார்‌ என்பதை நீங்கள் எப்பொழுதும் தெரிந்து கொள்ள இயலாது
நேர்மை என்பது உண்மையிலே ஒரு மழுங்கிய கருவி.  அது வெட்டுவதை விட இரத்தக்களறி ஆக்குவதே அதிகம்.  நீங்கள் அதிகாரத்தை அடைய  ஆசையோடு விரும்பினால் சீக்கிரமாகவே நேர்மையை ஒதுக்கிவிடுங்கள்.
2) தேவைக்கு குறைவாகப் பேசுவதன் மூலம் நீங்கள் பொருளும் அதிகாரமும் இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள், மேலும் எவ்வளவு குறைவாக நீங்கள் சொல்கிறீர்களோ அவ்வளவுக்கு முட்டாள்தனமாகவும் ஏன் ஆபத்தானதாகவும் எதையாவது சொல்வது குறையும்.

3) என்ன விலை கொடுத்தேனும், பிறர் கவனத்தைக் கவரும் வகையில் எடுப்பாக இருங்கள்,  உங்களைப் பிறர் அலட்சியப்படுத்தலை விட அவா்கள் உங்களைத் தாக்குவதும், ஏன் பழிப்பதும் கூட மேலானது.

4) நீங்கள் அடமையாக உழைத்துக் கொண்டிருக்கும் கணத்தில், உங்களுக்கு மேலே பிணந்தின்னிக் கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டுள்ளன.  உங்கள் படைப்புத் திறனைப் பயன்படுத்தித் தாங்கள் பிழைத்துக் கொள்ளவும், ஏன் உயிர் வாழவும்  கூட அவை திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.  அதைப்பற்றி புகார் செய்வதில் பலனில்லை.   நீங்களே ஒரு பிணந்தின்னிக் கழுகாக மாறி, ஏராளமான நேரத்தையும் சக்தியையும் சேமியுங்கள்.

5) வேட்டைகாரன், தன் திறமையை நம்பி விலங்குகளின் பின்னால் ஓடினால், விலக்குகளை முந்த முடியாது.  உண்மையில் நல்ல குதிரைகளும், வலிமையான வண்டிகளும் பயன்படுத்தப்பட்டால் சாதாரண அடிமை ஆண்களும், பெண்களும் கூட விலங்குகளைப் பிடித்து விடலாம்.
6) எப்போதும்  வாதிடாதீர்கள்.  சமுதாயத்தில் எதையும் வாதம் செய்தல் கூடாது.  முடிவுகளை மட்டும் கொடுங்கள்.

7) மகிழ்ச்சியானவர்களுடனும், அதிர்ஷ்டக்காரர்களுடனும் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.

8) நீங்‌கள் சோகமானவராயின், உற்சாகமானவரை நோக்கித் தரை இறங்குங்கள்.  நீங்கள் தனித்து வாழ விரும்புபவராயின் கூடி வாழ விரும்புபவருடன் வலுக்கட்டாயமாக நட்பு கொள்ளுங்கள்.  உங்கள் குறைகளைப் பங்கிட்டுக் கொள்பவருடன் எப்போதும் இணையாதீர்கள்.  உலகில் உள்ள எல்லா மருத்துவ முறைகளை விட, இதன் மூலம் நீங்கள் அதிகப் பயன் அடையலாம்.