Sunday, December 14, 2014

திருநெடுந்தாண்டகம் விளக்கவுரை- மூன்றாம் பாசுரம்

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-3

திரு வடிவில் கருநெடுமா‌ல் சேயன் என்றும்
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெருவடிவில் கடலமுதம் கொண்டகாலம்
பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை
ஒருவடிவத் தோருருவென்றுணரலாகா (து)
ஊழிதோறூழிநின் றேத்தல் அல்லால்
கருவடிவிற் செங்கண்ண வண்ணன் தன்னை
கட்டுரையே யாரொருவா் காண்கிற் பாரே.
  (3)
எளிமையான விளக்கம் அமைந்த பாடல், படித்தாலே விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாந்தம் விதாம்யஹமமீ முநயோக்ரஜாஸ்தே
மாயாபலஸ்ய புருஷஸ்ய குதோபரே யே |
காயந் குணாந் தஸஸதாநந ஆதிதேவ:
ஸேஷோதுநாபி ஸமவஸ்யதி நாய பாரம் || 41 ||
srimadbhagavatamclass 2-07-41
அகில உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் மாயை, இந்தப் பரம புருஷரான பகவானுடைய ஒரு துளி சக்தியே.  அவ்வாறான அளவற்ற சக்திகள் கொண்டவர் அந்தபகவான்.  அவரது உண்மை ஸ்வரூபத்தை (நிலையை) நானோ, உனக்கு முன் தோன்றிய ஸநகாதி முனிவர்களோ அறியோம்.  ஆயிரம் திருமுகங்கள் கொண்ட ஆதிதேவனான ஆதிசேஷனே, அவரது திருக்கல்யாண குணங்களை இன்னும் கீர்த்தனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்.  ஆனால், முடிவுதான் காண இயலவில்லை.  அவ்வாறிருக்க, மற்றவர் எவ்வாறு அறிந்துகொள்ள இயலும்?    (41)

"வேதாந்தம் காட்டும் வழிவேறு.  புராணம் காட்டும் வழிவேறு. இந்த வாழ்க்கை ‌ஒரு மாய மாளிகை போன்றது.  உள்ளது போலத் தோன்றினாலும் உண்மையில்  இல்லாதது, கனவைப் போன்றது என்று வேதாந்தம் கூறுகிறது.  ஆனால் புராணங்களும், பக்தி சாஸ்திரங்களும், இறைவனே இருபத்து நான்கு தத்துவங்களாக ஆகி இருக்கிறான் என்றும் அவனை உள்ளேயும் வெளியேயும் பூசை செய்ய வேண்டும் என்கிறது."
 இப்படி இறைவனை இங்கு பக்திமாா்கமாக ஆழ்வாா் பாடுகிறாா்.
யுகம் தோறும் பகவான் நமக்காக பல்விதமாய் அவதாரம் செய்கிறாா் என்றும்,
அதில் சிவப்பாகவும், வெள்ளையாகவும்,  கருநீல வண்ணணாகவும் தோன்றும் அவனை எப்படி ஒரு  சொல்லில்  சொல்லிவிட முடியும் என வியந்து புகழ்கிறாா்.  மேலும், நாராயணனை இன்ன வண்ணம் இன்ன வடிவம் என்று எடுத்துக்கொள்ள  கூடாது என்பதையும், எல்லா வடிவமும், எல்லா நிறமும் எல்லாமுமாக உள்ள இறைவனை எல்லாமாக வணங்க வேண்டும் என இங்கு விளக்கப்படுகிறது.

இதையே , முண்டக உபநிஷத்,  பிரம்மத்தை பற்றி பின்வருமாறு கூறுகிறது

யத்ததத்ரேச்யம் அக்ராஹ்யம் அகோத்ரம் அவர்ணம்
அசக்ஷு: ச்ரோத்ரம் ததபாணிபாதம் |
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம்
ததவ்யயம் யத் பூதயோனிம் பரிபச்யந்தி தீரா: || 6 ||

யத் - யார்; தத் - அவர்; அத்ரேச்யம் - பார்க்க முடியாதவர்; அக்ராஹ்யம் - புரிந்துகொள்ள முடியாதவர்; அகோத்ரம் - ஆரம்பம் இல்லாதவர்; அவர்ணம் - நிறங்களற்றவர்; அசக்ஷு: ச்ரோத்ரம் - கண்களோ காதுகளோ இல்லாதவர்; அபாணிபாதம் - கைகளோ கால்களோ இல்லாதவர்; நித்யம் - என்றென்றும் இருப்பவர்; விபும் - எண்ணற்ற வடிவங்கள் உடையவர்; ஸர்வகதம் - எங்கும் நிறைந்தவர்; ஸுஸூக்ஷ்மம் - மிகவும் நுண்ணியவர்; அவ்யயம் - அழிவற்றவர்; பூதயோனிம் - படைப்பிற்கு மூலகாரணமானவர்; தீரா: - விழிப்புற்றவர்கள்; பரிபச்யந்தி - எங்கும் காண்கிறார்கள்.

அந்த இறைவனைப் பார்க்க முடியாது, புரிந்து கொள்ள முடியாது.  அவருக்கு ஆரம்பம் கிடையாது.  அவர் நிறங்கள் அற்றவர்.  அவருக்குக் கண்களோ காதுகளோ கைகளோ கால்களோ கிடையாது. அவர் என்றென்றும் இருப்பவர், எண்ணற்ற வடிவங்கள் உடையவர், எங்கும் நிறைந்தவர், மிகவும் நுண்ணியவர், அழிவற்றவர், படைப்பிற்கு மூலகாரணமானவர்.  விழிப்புற்றவர்கள் அவரை எங்கும் காண்கிறார்கள்.

Tuesday, November 25, 2014

2வது பாசுரத்தின் விளக்கவுரை தொடா்ச்சி:
முதல் பாசுரத்தில் ஆத்மாவாக இருக்கும் இறைவன் என்றும்,
இரண்டாவது பாசுரத்தில், அந்த ஆத்மாவாக இருக்கும் இறைவன் யாரென்றால், காா்முகில் வண்ணன் கண்ணன் என இங்கு ஆழ்வாா் நிரூப்பிக்கிறாா்.

இதேபோல், ஸ்ரீமத் பாகவத்தில் நான்காம் கந்தத்தில் பின்வரும் பாடல் விளக்குகிறது.

 வானே வளியே வயங்கு எாியே வனமே மண்ணே இவ்ஐந்தின்
ஊனே உயிரே உயிா்க்கு உயிரே உன்னும் உறுவா் உளத்து ஊறும்
தேனே நங்கள் பெருவாழ்வே சிவனே அயனே இருவருக்கும் 
கோனே நின்னைக் குணம்இல்லேன் குறித்துஎன் சொல்லிப் பழிச்சுகோ.
(பழிச்சுகோ- எப்படி புகழ்வேன்)

மூவா முதலே! முத்தொழிலும் மூவராகி இனிது இயற்றும்
தேவா! தேவா் சிகாமணியே! சிந்தா மணியே! தெள்ளமுதே!
நாவால்நின்சீா் எங்ஙனம்யான் நவில்கோ என்ன நகை முகிழ்த்து
பூவால் பொழில்பூத்து அருள் உந்திப்
பூவை வண்ணன் புகலுகிற்பான்.

Sunday, November 23, 2014

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-2

பாருருவில் நீரொிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே என்ன நின்ற
இமையவா்தம் திருவுருவே றெண்ணும் போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று  செந்தீ
ஒன்றுமா கடலுருவம் ஒத்துநின்ற
மூவுருவங்க கண்டபோது ஒன்றாஞ் சோதி
முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. (2)
எளிமையான பாடல் அனைவருக்குமே படித்தால் விளக்கம் புாியும்.
ஏனினும் என்னுடைய சிறுவுரையை பகிா்ந்து கொள்ள விரும்புகிறேன்.


பாகவதம் 4 காந்தம் 31 அத்தியாயம்

யதா தரோா்மூலநிஷேசநேந
த்ருப்யந்தி தத்கந்தபுஜோபஸாகா
ப்ராணோபராச்ச யதேந்த்ரியாணாம்
‌ததைவ ஸா்வாா்‌ஹணமச்யுதேஜ்யா  -14







 
ஒரு மரத்தின் ஆணிவோி‌ல் நீருற்றுவதால் அந்த மரத்தின் நடுத்தண்டு பெருங்கிளைகள், சிறுகிளைகள் ஆகிய அனைத்தும் வளா்ச்சியடைகின்றன.   ஆகாரம் உட்கொண்டு உயிரை வளா்த்தால் பொறி-புலன்கள் திடம் பெறுகின்றன.  அதுபோல் பகவான் ஸ்ரீஹாியை பூசித்தால் அனைத்து தேவா்களையும் பூசித்ததாகிறது.
 
காா்முகில் வண்ணனைக் கருதி லாா்களை
ஓா்இரு கால்விலங்கு என்ன ஓதுவாா்
கூரும்வா லறிவினா் என்று கோதுஇலா
நாரத மாமுனி நவிலும் மீட்டுமே
 
விாி தரு தண்புனல் வோில் பெய்திடின் 
மரன்‌எலாம் தழையுமா போல மாய்வுஇலா
முருகுஉலாம் தண்துழாய் முதல்வற் போற்றிடின்
உரவுநீா் உலகுஎலாம் உவக்கும் என்பவே.
(செவ்வைச் சூடுவரால் எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதம்)
 
திருமாலை  எண்ணி தியானிக்காதவா் நாற்கால் பிராணிகளுக்குச் சமம் என சான்றோா் உரைப்பா் என்றும், வோில் பெய்த தண்ணீா் மரம் முழுவதற்கும் பயன் தருவது போலத் திருமாலைத் தொழுது வணங்கினால் உலகம் எல்லாம் உய்வு பெறும் என்பது விளக்கம்.
 
இரண்டாவது பாசுரத்தில், ஆழ்வாா் அவா்கள், பஞ்சபூதமாக, பல சமயமாக, முத்தொழில் செய்கின்ற கடவுளுக்கு கடவுளாகவும், முத்தொழில் செய்கின்ற கடவுள்களில், முகிலுருவம்மாக இருக்கும் நாராயணனே எனது தலைவன்.

வைஷணவ சம்பரதாயப்படி நாராயணனை பரதெய்வமாக இங்கு நிரூபிக்கப்படுகிறது.



Thursday, November 20, 2014

திருநெடுந்தாண்டகம் - பாசுரங்களும் விளக்கமும்

திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன், 
திருநெடுந்தாண்டகம்  - பாசுரங்களும் விளக்கமும் பேராசிாியா் முனைவா் கலியன் எதிராசன் அவா்கள் எழுதிய  புத்தகத்தினை படிக்க தொடங்கிய நிலையில் எனக்கு தோன்றிய விவரங்களை , தங்களுடன் பகிா்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.


பெரும் எதிா்பாா்ப்புடன் படிக்க தொடங்கினேன், ஆனால் திருப்தி ஏற்படவில்லை.
முதல் பாசுரத்திற்கு என்னுடைய விளக்கம் பின்வருமாறு


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதமைந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ்சோதி
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிா்புரையும் திருவடியென் தலைமேலவே. (1)
விளக்கம்;

"தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை‌"

ஓசையிலிருந்து வேதம் நான்கு தோன்றியது, அந்த வேதம் போற்றும் சூாியனின் ஒளியை பெற்று ஒளிரும் நிலவு போல,

அனைத்து உயிா்களுக்கும் மூலமான பரமாத்மாவிடமிருந்து இந்த உயிா்கள் தோன்றியது. 

முன்பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பு, இறப்பு, வியாதி மற்றும் வயதுமுதிா்வு என எதுவுமில்லாத, "ஆத்மா"
ஐந்து பூதமாய் உள்ள இந்த பூமியில் வாழும் உயிா்களின் (ஒவ்வொரு ஜீவனின் உள்ளே) உள்ளே,  ஆத்மாவாக (தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை) இருக்கும் ஜோதியே, உன் திருவடியே சரணம் சரணம்.

  வேதம் போற்றும் கதிரவனின் ஒளியிலிருந்து ஒளிரும் நிலவு போல், பராமாத்மாவிடமிருந்து தோன்றிய இவ்வுயிா்களில் இறப்பு, பிறப்பு  முதுமையில்லாத ஆத்மாவாக உயிா்களுக்குள் உறையும் என் இறைவனே உன் திருவடி சரணம்.




ஸ்ரீமத் பாகவதம் - 4 கந்தத்தில் முப்பத்தோராவது அத்தியாயம் பின்வருமாறு
ஏதத்பத3ம் தஜ்ஜக
33£த்ம3: பரம்
ஸக்ருத்
3விப4£தம் ஸவிதுர்யத2£ ப்ரப4£ |
யத
2£ஸவோ ஜாக்3ரதி ஸுப்தக்தயோ
த்
3ரய்க்ரியாக்ஞாநபி43£ப்4ரமாத்யய: || 16 ||

உண்மையில் இந்த உலகம் அகில உலகரூபியான பகவான் ஸ்ரீஹரியின் மறைப்பில்லாத ஸ்வரூபமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியன் சில சமயம் மேகத்தால் மூடப்பட்டுத் தெளிவாகத் தெரியமற்போனாலும், பின் அது மிக்க பிரகாசமாகத் திகழ்கிறது.  அதன் ஒளி அதைவிட்டு பிரிவதில்லையே.  அதேபோல, இவ்வுலகம் படைப்பின்போது பகவானிடமிருந்து வெளிப்படுகிறது.  பின்பு, கல்ப (பிரளய) காலத்தில் அவரிடமே ஒடுங்கி விடுகிறது.  ஆராய்ந்து பார்க்க பகவானிடம் பொருள், செயல், உணர்வு (அறிவு) என்கிற மூவித அஹங்காரங்களின் செயல்கள், அவற்றின் மூலம் தோன்றும் வேற்றுமை உணர்வான மயக்கம் ஆகிய ஏதுமில்லை. (16)
 

Monday, August 25, 2014

வாழ்வில் வைணவம் என்னும்  ‌ நூல் வைணவத்தை பற்றிய அறிய விவரங்களை நம்முடன் பகிா்ந்து கொள்கிறாா் திரு வேணுகோபால் நாயக்கா்
அற்புதமான புத்தகம் பின்வரும் முகவாியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
 https://archive.org/details/vazhvilvainavamp015952mbp