Wednesday, June 2, 2010

காதல் விதிகள-ரிச்சர்ட் டெம்ப்ளர்

 காதல் விதிகள்-ரிச்சர்ட் டெம்ப்ளர்(The Rules of Love) எனும் பு‌கழ்பெற்ற புத்தகத்தின் தமிழாக்கம்


விலை ரூ.150/-
என்னவளுக்காக வாங்கினேன்,
ப‌டித்த பின்னர் தான் தெரிந்தது பல  விவரங்கள்,
காதலிக்கும் முன்பாக இருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்பது என்கருத்து,

புத்தகத்தின் பின்அட்டையில் உள்ள வாகசத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் உறவுகள் மேம்படுவதற்கான உன்னதமான விதிகள்

ஆதாம் ஏவாள் காலம் முதல் மனதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல், காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது.  ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
 
உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன.  காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் உப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது.
ஆனால் படிப்பில், பொது அறிவில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள் கூட காதல் என்று வந்துவிட்டால் எல். கே.ஜி ஸ்டூடண்ட் ஆகிவிடுகிறார்கள்.  ஆம், காதலை வெல்வதும், அடைவதும் அத்தனை சுலபமல்ல.  மனிதனுக்குக் காதல் உணர்வு மட்டும் தான் சுலபமாக வருகிறது.  ஆனால் காதலை தன் வசப்படுத்துவது என்பது இன்றுவரை பலருக்கு எட்டார நிலவு.  பலபேர் ‌‌"ஐ லவ் யூ" வை பரிட்சை போல பலமுறை முயற்சி செய்து பாபர்த்தாலும் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள்.  நம் அணுகு முறையில், குணத்தில், நடத்தையில் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்‌தாலே போதும்,  காதல் பூங்கொத்து நம் கையில் என்று அடித்துச் சொல்கிறது இந்தப்புத்தகம்.

விமர்சனம் ‌தொடரும்...............

No comments: