Friday, April 30, 2010

மனித உறவுகள் -2

புத்தகத்திலிருந்து.............

சுமுகமாகப் பழகும் மனிதத் தன்மைகளை நான்கு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்
1) பிறரது அறிமுகம்-நப்பு‌‌‌-உறவு ஒருவரை‌யொருவர் நம்புதல்.  இந்தப் பரஸ்பர நம்பிக்கை நம் உறவுக்கு வலிமை தருகிறது.
2) நமது பேச்சு மூலமும், சம்பாஷ‌ணை மூலமும் கருத்துப் பரிமாற்றங்களின் மூலமும் நம் உறவு பலப்படுகிறது.  நம்மால் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாகவும் குழப்பமில்லாமலும் நம் எண்ணங்களைத் தெரிவிக்க முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உறவின் தன்மை அமைகிறது.

3) அடுத்த கட்டமாக, பிரச்னைகள் என்று வரும் போது, நமது பர‌ஸ்பர ஆதரவும் துணையும் உறவுகளின் பிணைப்பை உறுதியாக்குகிறது.  உறவுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும் கைகொடுக்க வேண்டும்.

4) பிரச்னைகள் இல்லாத உறவுகளில்லை.  எவ்வளவு நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தாலும் சமயத்தில் மனஸ்தாபம் தோன்றுவது இயல்பு.  அவற்றை உணர்ந்து பிரச்னைகளுக்கு முடிவு காண நாம் முயல வேண்டும்.  பரஸ்பர நம்பிக்கைக்கும் உறவுக்கும் பாதகமேற்படாத வண்ணம் நம் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள முயல வேண்டும்.


கௌரவம் என்பது பிறர் கொடுத்து நாம் பெறுவதல்ல.  நம்மைப் பற்றி நாமே கொண்டிருக்கும் மரியாதைதான் நம் கௌரவம்.  பிறர் அதை இடறுகிறார்கள் என்பதால் நாம் தாழ்ந்துவிட மாட்டோம்.  அதற்காக அவர் மீது அனுதாபப்பட்டுவிட்டு நம் காரியத்தைக் கவனிப்பது நல்லது.



குடும்பத்திலும் சரி, தொழிலிலும் சரி; ஒரு முன் உடன்பாடு -மனிதாபிமான நோக்கு நமது நட்பை வளர்க்கும்.  "இதோ பார் நான் ஒன்றும் எல்லாம் உணர்ந்த ஞானியல்ல.  தெரிந்தோ, தெரியாமலோ உன் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடும்.   அது வேண்டுமென்று கெட்ட நோக்கத்துடுன் செய்ப்பட்டதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள் "என்று  மனைவியிடம் சொல்லும் போது வாழ்க்கை எளிதாக அமைகிறது.

No comments: