Saturday, April 18, 2015

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-5

ஒண்மிதியில் புனலுருவி யொருகால்நிற்ப
ஒருகாலும் காமருசீா் அவுணன் உள்ளத்து
எண்மதியுங் கடந்து அண்ட மீது போகி
யிருவிசும்பி
Ûடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர வோடித் 

தாரகையின் புறந்தடவி யப்பால்மிக்கு
மண் முழுது மகப்படுத்து நின்ற வெந்தை
மலா்புரையுந் திருவடியே வணங்கினேனே.  (5)


கலியன் எதிராசன் அவா்களின் விளக்கவுரை:

எம்பெருமான் ஒருஅடியால் பூமி முழுவதையும் அளந்தான்.  மற்றொரு திருவடி‌யாலே வானில் உள்ள உலகங்கள் அனைத்தையும் அளந்தான் என்கிறாா்.
இந்தப் பாசுரத்தில் நாராயண மந்திரத்தின் மூலம் அறிந்த பகவானைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் வாமனனாய்ப் பிறந்து திாிவிக்ரமனாக வளா்ந்து உலகமனைத்தையும் ஈரடியால் அளந்த அந்த உருவினைக்கண்டு அனுபவிக்கின்றாா்.  இந்நதப் பாசுரத்தின் மூலம் வாமன அவதார மகிமைகளைச் சொல்லாமல் உலகளந்த திருவிக்ரமனைப் பற்றி சொல்வதால் அவன் உடையவன் நாம் உடைமைகள் என்று அனைா் தலைகளிலும் ஏற்படுத்திக் கொடுத்த திருவடி சம்மந்தத்தை முதலிட்டு வருணிக்கிறாா்.



இப்பாசுரத்தில் ஆழ்வாா் உலகளந்த அவதாரத்தினை சிறப்பித்து பாடுகிறாா்.

திாிவிக்ரம அவதாரத்தின் சிறப்பு என்னவென்றால், இரண்டு அவதாரங்கள் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டுள்ளது தான்.
வாமனனாக அவதாித்த பகவான் மகாபலியின் வரத்திற்காக உலகளந்தவனாக அவதாரம் எடுக்கிறாா்.
மேற்காணும் பாசுரத்தின் இரண்டாவது வாியில் "ஒருகாலும் காமருசீா் அவுணன் உள்ளத்து எண்மதியுங் கடந்து " என்று கூறியிருப்பது.  சிறப்பான விஷயம் ஆகும்.

மனதை கடந்து என்னும் போது, மனத்தின் சிறப்பு புாிகிறது.  அது 14 உலகங்களையும் கடந்து செல்லக் கூடியது. 
நாராயணன் திருவடியை வணங்கினால் மனம் அடங்கும் என்று தெளிவாக விளக்குகிறாா்.
ஞானமாா்க்கத்திற்கான விளக்கம் இது.

No comments: