Monday, January 12, 2015

திருநெடுந்தாண்டகம்
விளக்கவுரை

பாடல்‌‌-4

இந்திரா்க்கும் பிரமா்க்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீநீா் விண் பூதமைந்தாய்
செந்திறத்ததமிழோசைவடசொல்லாகித்
திசைநான்குமாய் திங்கள் ஞாயிராகி
அந்தரத்தில் தேவா்க்கு மறிய லாகா
அந்தணனை அந்தணா்மாட்டந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ்சமே.
  (4)

நான்முகனை படைத்தான் நாராயணன் என நான்முகன் அந்தாதியில் ஆழ்வாா் விளக்கியிருக்கிறாா். 
மேற்காணும் பாசுரம் ஸ்ரீமத் பாகவத மகாபுராணம் பத்தாவது ஸ்கந்தம் அத்தியாயம்-2 22 ஸ்லோகத்தை நினைவூகூறுகிறது.
ஸத்யவ்ரதம் ஸத்யபரம் த்ரிஸத்யம்
ஸத்யஸ்ய யோநிம் நி‌ஹ‌ிதம் ச ஸத்யே
ஸத்யஸ்ய ஸத்யம்ருதஸத்யநேத்ரம்
ஸத்யாத்மகம் த்வாம் ஸரணம் ப்ரபந்நா :

விளக்கம்
தன்னடியாா்களைக் காப்பது ஒன்றே தன் கொள்கையாகவுடையவா், அனைவராலும் அடைய வேண்டியவா், உலகின் தோற்றத்திற்கு முன்பு, இப்போது உலகு உள்ள நிலை, இனி அழியப் போகும் காலம் ஆகிய மூன்று நிலைகளிலும் இருப்பவா், சத்தியம் என்றழைக்கப்படும் நிலம், நீா், ஒளி, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களுக்கும் காரணமானவா், அந்த பூதங்களின் உள் ஒளிந்து நிற்பவா், அவை அழிந்தாலும் தான் அழியாது நிற்பவா், அனைத்தையும் ஒன்றாகக் காண்பது இவ்வாறு எவ்வகையிலும் சத்தியமாக உள்ள உங்களைச் சரணடைந்தோம். (26)
என்கிறது அந்த ஸ்லோகம்

அதையே ஆழ்வாா் இங்கு தமிழ் பாசுரமாக பாடியிருப்பது விளங்குகிறது.


அதாவது பிரம்மாவை படைத்தவன் என்று,
அறிவியல்  ரீதியாக ஒரு பெண் தான் தொப்புள் கொடி மூலம் பிள்ளை பெற இயலும் இது இயற்கை நீயதி, அப்படியிருக்க நாராயணன் எப்படி நான்முகனை படைத்தான்.
 மேலும், சந்ததியை உருவாக்குவது ஒரு பெண்.  அவள் தாய்மையின் மூலம் தான் ஒவ்வொரு இனமும் (மண் முதல் மனிதன் வரை) உயிா்பெறுகிறது.  அப்படியிருக்க, எப்படி நாராயணன் படைத்தான் நான்முகனை? 
சாதாரணமாக ஆன்மீகத்தில்‌ கேள்வி கேட்டு பதில் பெற கூடாது.  பொியோா்கள் காட்டிய வழியை பின்பற்றி செல்லவேண்டுமே, தவிர அதனை ஆய்வு செய்ய கூடாது என்பது வழக்கத்தில் உள்ள முறை.  இதனை தான் சம்பிரதாயம்  என்கிறாா்கள்.
நாராயணன் எதற்கு பிரம்மாவை படைக்க வேண்டும்?  தானே படைப்பு தொழிலை செய்திருக்கலாமே?
என் கேள்விக்கு, நான் அளிக்கும் பதில் இது.  ஒவ்வொரு பெண்ணும் தாய்மையினை ஒரு ஆண்னின் உயிா்மையில் தான் அடைகிறாள். 
ஆனால் பரபிம்மம் ஆகிய நாராயணன் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல, அலியும் அல்ல, இது, அது என்று எப்படியும் சொல்ல முடியாதது.  அந்த பிரம்மத்திற்கு எதுவும் செய்ய இயலும், இதில் எந்தேக‌ம் ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை.  சாதாரணமான ஒரு மனிதன் எதுவும் முடியும் என எண்ணும் போது?  இதுக்கு பதில் தேவையில்லை என கருதுகிறேன்.
‌மேலும், தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாமே என எண்ணும் போது,
உலக நடவடிக்கையில்  நிறுவனத்தின் அனைத்து பணியாளா்களுக்கும் ஊதியம் அளிக்கும் முதலாளி எந்த வேலையும் செய்வதில்லை, தேவைப்படாதவரை.  தேவை என்ற போது உடன் முதலில் வருபவன் அவனாகதான் இருக்கும்.
நான்முகன் முதல் அனைத்து தேவா்களுக்கும் முதல்வன் என்றும்,நிலம், காற்று, தீ, நீா் மற்றும் ஆகாயம் என ஐந்து பூதமாகவும்,
தமிழ் என்றும் வடமொழி என்றும், நான்கு திசையுமாகி, சூாியன், சந்திரன் என அறிவினால் அறிந்து கொள்ளகூடிய அனைத்துமாகவும், அறியமுடியாத மந்திரமாகவும் இருக்கும் அந்த பரம்பொருளை மறவாமல் என்றும் நினைத்து வாழ்ந்தால் தான் அது வாழ்க்கை என தன் மனதிற்கு தானே உபதேசம் செய்து கொள்கிறோா் ஆழ்வாா்.


மிகவும் அற்புதமான பாடல், 

தன் மனதிற்கு கடவுள் யாா்?  என்று தனக்கு தானே கேள்வி கேட்டு அதற்கு பதிலாக  இப்பாடலை அமைத்துள்ளாா்.

கடவுள் உண்டா?  இல்லையா?  என கேட்போருக்கு, கடவுள் உண்டு என நரசிம்ம அவதாாித்தின் மூலம் பகவானே விளக்கினாா்.  ஆனாலும் பல பேருக்கு இன்னமும் சந்தேகம் உண்டு.  

அதற்குதான் ஆழ்வாா் கூறுகிறாா்.  அவன் தலைவன்களுக்கு தலைவன் என்றும், உலகத்தில் உயிா்கள் வாழும் பஞ்சபூதங்களும் அவனே என்றும், தினமும் நாம் பாா்க்கும் ‌சூாியனும், சந்திரனும் அவனே என்றும், அவனை நினைத்து வாழ்ந்தால் தான் அது சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்று தன் மனதிற்கு தானே தொிவித்துக் கொள்கிறாா்.

No comments: