Thursday, April 29, 2010

மனித உறவுகள் டாக்டர் எம். எஸ் . உதயமூர்த்தி

புத்தகத்திலிருந்து சில  வரிகள்


மனித உறவுகள் மிக நுட்பமானவை.  சிறு முக மலர்ச்சியில் கூட கண்களின் பாவத்தில் கூட ஒரு உறவின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.  வார்த்தைகளை மூடி மறைக்கலாம்.  ஆனால் ஒம் உணர்வுகளை மூடி மறைக்க முடியாது.


‌"என்னைப் பாராட்டும் ஒருவனை, உலகின் இரண்டாவது பெரிய மனிதனாக நான் நினைக்கிறேன்!"  பிறருக்கு உதவும் ஒரு மனிதனுக்கு உலகமே உதவ முன்வருகிறது.

ஒரு ஆசை நம்முள் எழுந்ததானால், அதை அடையும் திறமை நம்முள் இருப்பதால்தான் அது நம்முள் எழுந்தது என்கிறார் ஏர்ல் நைட்டிங்கேல் என்ற பிரபல எழுத்தாளர்


நம் அனுபவத்தில் சிற்சில நாட்களில் சிற்சில விஷயங்கள் எல்லாம் நேர்மாறாக நடப்பதைக் காண முடியும், அந்த நேரங்களில் நல்ல பிரார்த்தனையிலோ அல்லது தோட்டம் போடுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், சினிமாவுக்குப் போவது என்பன போன்ற நம் லட்சியத்துக்கு உறவில்லாத வேறு காரியங்களில் ஈடுபடுவது நல்லது. 

பிறர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டாலே அரைவாசிக் குறைகள் மறைந்துவிடும்.  என்பார்கள் மன சிகிச்சை நிபுணர்கள்.  குடும்பத் தகராறுகளிலிருந்து, முதலாளி - தொழிலாளி பிரச்னையிலிருந்து நாட்டிப் பிரச்னைகள் வரை இந்த உண்மை பொருந்தும்.
(தொடரும்)


No comments: