Sunday, September 7, 2008

புத்தகத்தின் பெயர் : தட்டுங்கள் திறக்கப்படும்

புத்தகத்தின் பெயர் : தட்டுங்கள் திறக்கப்படும் 
ஆசிரியர் : டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
வானதி பதிப்பகம் (8வது பதிப்பு)

மேற்காணும் புத்தகத்தின் முன்னுரையில் 
"வேத நூல்களில் கூறப்பட்டிருக்கிறது என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

உனது பெற்றோரும், ஆசிரியரும் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

பாரம்பரியமாக இப்படித்தான் செய்து வந்திருக்கிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.

உன் அறிவை உபயோகித்து எதையும் பரிசீலி.  அதற்குப் பின்னும் அது ஏற்புடைத்தானால் மட்டுமே ஏற்றுக்கொள்". புத்தர் பிரான் கூறிய வாசகத்தை இங்கு நினைவில் எடுத்துக்காட்டியுள்ளார்.

இப்புத்தகம் முழுவதும் வாசகர்களின் கேள்விக்கு-பதில் அளிப்பது என்ற முறையில் அமைந்துள்ளது.


ஒரு கேள்விக்கு இப்படி பதிலளிக்கிறார்.

"வாழ்க்கையே; அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டம்தான்; அறிவை முன் வைத்து, உணர்ச்சியைப் பின் வைத்து வாழும்போதுதான், வாழ்வு நல்ல நெறிகளுடன் போகிறது.  உணர்ச்சியை முன் வைத்து காரியங்களைச் செய்யம்போது வாழ்வில் சிக்கல்களை உருவாக்குகிறோம்."


No comments: