Sunday, September 7, 2008

மேற்கின் அழிவிலிருந்து ... பாரதத்தின் மறுபிறப்பு- ஸ்ரீ அரவிந்தர்

ஸ்ரீஅரவிந்தரின் எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது இந்நூலை தமிழாக்கம் திருமதி நளினி மதியழகன் அவர்களின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து 

உலகின் மீது ஆன்மீக ஆதிக்கத்தைப் பரப்ப, இந்தியாவைத் தவிர வேறு யாருக்குச் சர்ச்சையற்ற உரிமை இருக்கிறது?
இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டும்.  ஐரோப்பிய நாகரிகத்தை இந்தியாவுடன் இணைப்பதால் ஐரோப்பாவிற்கும் இலாபமில்லை: ஏனெனில் ஐரோப்பாவின் பிணிகளுக்கு மருத்துவனாக விளக்கக்கூடிய இந்தியாவும் பணிகளின் பிடியில் சிக்குண்டால் நோய் குணமாகாது.

இந்தியன் ஒருவனே அனைத்தையும் நம்புவான், அனைத்தையும் துணிவுடன் ஏற்பான்,  அனைத்தையும் தியாகம் செய்வான்.  ஆதலின் முதலில் இந்தியராகுங்கள்.
கடவுள் மீது நம்பிக்கை, கடவுள் ஒரு புத்தகம் (இத்தனை யுகங்களில்) அதுவும் ஒரேயொரு புத்தகம் எழுதினார் என்பதில் நம்பி¬க்கை, ஞாயிறு தோறும் தேவாலயத்திற்குச் செல்லுதல், இவையே ஐரோப்பாவின் குறைந்தபட்ச மதம். 

"நீங்கள் எதைக் கண்டு பிடித்துள்ளீர்" என்ற கேள்வியில் ஒரு இந்தியன் திருப்தியுற முடியாது.  அதில் கேள்விக் கேட்டுதான்  அவனுக்குப் பழக்கம்.  
இந்தியனின் பதில் இதுவாகாத்தான் இருக்கும் - உனக்கென்ன தெரியுமென்பதில் எனக்கு அக்கறை இல்லை.  நீ யார் என்பதில் தான் எனது அக்கறை.  

வெறும் சம்பிரதாயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட சில பழக்க வழக்கங்கள் ஹிந்து சமுதாயத்தில் உண்டு.  மிக பழங்காலத்தில் அவை இருந்தன என்பதற்கு நிரூபணம் இல்லை.  
நாகரிக சமுதாயத்தில் மனு நீதியை முழுமையாக எடுத்துக் கொள்வதென்பது 
கங்கையை ஹிமாலயத்திற்குத் திரும்பி ஓடுமாறு சொல்வதாகும்.

தொடரும்...


No comments: