Sunday, September 14, 2008

சிறுகதை "திவசம்"

தினமணி 2007ன் இணைப்பு கதிரில் பரிசுப்பெற்ற கதை "திவசம்"

இது ஒரு முற்போக்கு கதை, தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்பவும், முடநம்பிக்கைக்கு சரியான பதிலடியாக அமைந்துள்ளது. நானும் வருடந்தோறும் தந்தைக்கு திவசம் செய்கிறேன் குடும்ப சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தின் காரணமாக, ஆனால் மனதில் இது பற்றி பல எண்ணங்கள், கேள்விகள், சில சமயம் குழப்பங்கள், எது சரியென்று. இதுவரை முடிவு செய்ய முடியவில்லை.

என்னுடைய குடும்பத்திலும் இக்கதையில் வருவது போல் ஒரு சம்பவம் நடந்தது. அக்குடும்பத்தில் எல்லோரும் நலமாகதான் இருக்கிறார்கள், வருடந்தோறும் திவசம் சரியாக முறையாக தான் நடக்கிறது. இது சரியா?, அல்லது இக்கதையில் விஷ்ணு சொல்லுவது சரியா?

அதை விடுங்கள்

கதைக்கு வருவோம்.

சுருக்கம்

பாட்டிக்குத் திவசம் லீவ் போட்டு ஊருக்கு வருமாறு அம்மா, கார்த்தியை அழைத்தார்கள்.

பாட்டிக்கு கார்த்தியை மிகவும் பிடிக்கும், அவனை ஒரு நாளைக்கு நூறு முறையாவது கன்னங்களை உருவிவிட்டு திருஷ்டி கழிப்பாள்.

அது ஓர் ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணி தாண்டியும் சமையல் ஆகவில்லை. பாட்டிக்கு பசி பொறுக்க முடியாமல் இரண்டு முறை தண்ணீர் குடித்துவிட்டால். வெளியே கட்டிருந்து ஜானியும் பசியில் குரைக்கத் தொடங்கியது.

"அந்த நாய்க்கு எதையாவது போடேன்" என்று கையில் ரிமோட்டைக் சுழற்றியபடி அப்பா கத்தினார். அதற்கு அம்மா "வர்றேன் ... எல்லா நாய்க்கும் போடத்தானே வந்திருக்கேன்" என்று அழுத்தமாகவும், ஆங்காரமுமாய் வார்த்தைகள் வெளிப்பட்டது.

...... மறுநாள் காலை பாட்டி வீட்டில் இல்லை. "ஜாதகப்படி பாட்டி ஆயுள் முடிஞ்சுட்டு, அவங்க காணாமப் போன நாள்லேயே திவசம் பண்ணுங்களேன் என்றார் சாம்பு சாஸ்திரி.

முடிவு

அன்றைய நாளை, கார்த்தி சிவானந்த ஆஸ்ரமம் போய் வருகிறானாம்.

"எடுத்துப் போடக்கூட ஆள் தேடமா, வேணாம்னு வெறுத்துட்டுப் போன பாட்டி, இவங்க படைக்கிற புடவைக்கும் பாயாசத்துக்கும் வந்து நிப்பாங்கன்னு நானும் நம்பலை" கார்த்தியின் பெரியப்பா மகன் விஷ்ணு தெரிவித்தது கார்த்திக்கு பெரிய ஆறுதலாய் இருந்தன.


கதை ஆசிரியர் தீபா பிரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

No comments: